வெள்ள பாதிப்பு காரணமாக பாலக்காடு - சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மங்களூர் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புக்கு பின்னர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கியது. ஆனாலும் சில ரயில்கள் மாற்றுப்பாதை மற்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இதில் தற்போது 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதில் தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம்- மங்களூர் சிறப்பு ரயில், பாலக்காடு - சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல நாகர்கோவில்-மங்களூர், மங்களூர்- தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மங்களூர் -தாம்பரம் சிறப்பு முறையில் பத்தாம் தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.