தமிழ்நாட்டில் முதல்முறையாக விரைவில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக முட்டுக்காடு படகு குழாம் சுற்றுலா துறை சார்பில் 5 கோடி மதிப்பீட்டில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு மாதத்தில் பணிகள் முடிவடையும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.