இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்கம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மற்றும் ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் 23 மற்றும் ஜனவரி 26 தேதிகளில் 13 மற்றும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த சம்பவங்களுக்கு எதிராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு அவசர கடிதங்கள் அனுப்பி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரினர்.
இதைத் தொடர்ந்து, இந்திய தூதரகம் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, 27 மீனவர்களையும் விடுவித்து, அவர்கள் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.சென்னைக்கு வந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.














