ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஜாம்பியா நாட்டில், 5 லட்சம் ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் உள்ள காலம்பா அருவிக்கு அருகே மரத்தாலான கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 476,000 ஆண்டுகள் பழமையானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காலக் கணிப்பு செய்ததில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நேச்சர் ஆய்விதழில் வெளிவந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மரக்கருவிகளில் இவையே பழமையானவை ஆகும். இவற்றின் மூலம், பழங்கால மனிதர்கள் நாம் நினைத்ததை விட மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்” என்று தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.