தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் 19ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.