சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க 28,200 செல்போன்களை முடக்குமாறு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தொலைதூர செயலிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மேலும் செல்போன்களை சைபர் குற்றங்களுக்காக அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி 20 லட்சம் செல்போன்களை பயன்படுத்தி குற்றங்கள் அரங்கேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 28,200 செல்போனில் உடனடியாக முடக்குமாறு தொலைத் தொடர்பு துறைக்கு மத்திய தொலைதொடர்பு துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது