என்டிடிவியின் 8.27% பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றியது

December 21, 2022

அண்மையில், என்டிடிவியின் பங்குகளை வாங்குவதற்கு வெளிப்படை அறிவிப்பு வெளியானது. அதன் மூலம், என்டிடிவியின் 8.27% பங்குகளை அதானி குழுமத்தின் விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம், என்டிடிவி நிறுவனத்தில், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு 37.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 99% பங்குகளை கைப்பற்றி, என்டிடிவியின் 29.18% பங்குகளை அதானி குழுமம் உரிமையாக்கியது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம், ஆர்ஆர்பிஆர் பங்குகளை கைப்பற்றியதை தொடர்ந்து, நிறுவனத்தின் முக்கிய […]

அண்மையில், என்டிடிவியின் பங்குகளை வாங்குவதற்கு வெளிப்படை அறிவிப்பு வெளியானது. அதன் மூலம், என்டிடிவியின் 8.27% பங்குகளை அதானி குழுமத்தின் விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம், என்டிடிவி நிறுவனத்தில், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு 37.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 99% பங்குகளை கைப்பற்றி, என்டிடிவியின் 29.18% பங்குகளை அதானி குழுமம் உரிமையாக்கியது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம், ஆர்ஆர்பிஆர் பங்குகளை கைப்பற்றியதை தொடர்ந்து, நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பதவி விலகினர். மேலும், அதானி குழுமம், என்டிடிவியின் 26% பங்குகளுக்கு கட்டாய வெளிப்படை பங்கு விற்பனையை அறிவித்தது. அதன் வழியாக, கூடுதலாக 8.27% பங்குகளை அதானி குழுமமே கைப்பற்றி உள்ளது. என்டிடிவி நிறுவனம், டிசம்பர் 17ஆம் தேதி, பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu