சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து அர்ஜென்டினா அணி உலக சாதனை படைத்துள்ளது.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 427 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளது. அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிலி அணி அங்கு மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அர்ஜென்டினா அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 427 ரன்கள் குறித்து உலக சாதனை படைத்துள்ளது. மேலும் இதில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து விளையாடிய சிலி அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 63 ரன் மட்டும் எடுத்து 364 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.














