வார விடுமுறை நாளையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக 1460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்தம் என்பதால் சென்னையிலுருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர்,சேலம்,ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 1130 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. அதன்படி மொத்த 1460 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக www.tnstc.in இன் என்ற இணையதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்