ரஷியாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷிய நாட்டின் மாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.
தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையுடன் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது.