விண்வெளியில் சூரிய குடும்பத்தை விட மிகப்பெரிய கருந்துளைகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தில் உள்ள சஜிடேரியஸ் ஏ* கருந்துளையை விட ஆயிரம் மடங்கு பெரிய கருந்துளைகள் சிலவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கருந்துளைகள் அசாதாரணமான ஈர்ப்பு விசையால் சுற்றியுள்ள பொருட்களை உள் இழுத்து அழிக்கின்றன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் உருவாகியிருக்கலாம் என்று அறியப்படுகிறது. அதிக எடை கொண்ட கருந்துளைகள் பிரம்மாண்டமாக வளர்ந்து, பிரபஞ்ச வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் இருந்து மிக வேகமாக உருவாகியிருக்கலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.