University of Southern California (USC)-ன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமியின் மையக்கரு பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே பூமியின் மையக்கரு நெகிழ்வாக இருக்கலாம் என்ற முன் யூகங்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் பூமியின் மையக்கரு சுற்றுவரியின் வேகம் குறைவதை கண்டறிய முயன்ற போது, எதிர்பாராத வகையில் பூமியின் மையக்கரு உறுதியாக இல்லை என்ற புதிய ஆதாரங்களை கண்டுபிடித்தனர். விஞ்ஞானி Vidale கூறுகையில், "பல்வேறு நிலநடுக்க தரவுகளை பகுப்பாய்வு […]
விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Vivo V50 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வந்த Vivo V40 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோஸ் ரெட், கிரே, நீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. சிறப்பு அம்சங்கள்: 🔹 6.77-இன்ச் டிஸ்பிளே 🔹 Snapdragon 7 Gen 3 ப்ராசஸர் 🔹 Android 15 இயங்குதளம் 🔹 50MP பிரதான கேமரா + 50MP செல்ஃபி […]
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஜியோ நிறுவனம், எலக்ட்ரிக் வாகனத் துறையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த விலை போக்குவரத்தை உருவாக்கும் நோக்கில், 48V லித்தியம் பேட்டரியுடன் கூடிய எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம் என்றும், 45 கிமீ வேகத்தில் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும் என்று கூறப்படும் இந்த எலக்ட்ரிக் […]
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை அறிமுகம் செய்துள்ளது. "மஜோரானா 1" எனப்படும் இந்த சிப், பாரம்பரிய கணினிகளை விட மிக வேகமாக செயல்படும் என கூறப்படுகிறது. கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் குவாண்டம் தொழில்நுட்பம் விரைவில் வளர்ச்சி அடையும் என கணித்துள்ள நிலையில், மைக்ரோசாஃப்டின் புதிய கண்டுபிடிப்பு அந்த முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. குவாண்டம் கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் 0 மற்றும் 1 ஆகிய இரு மதிப்புகளையும் பயன்படுத்துவதால், கணிதம், […]
ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை (பிப். 19) ஐபோன் 16 இ மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. முதன் முதலில் ‘ஆப்பிள் இண்டெலிஜன்ஸ்’ செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இது வெளியாகியுள்ளது. 6.06 இன்ச் OLED தொடுதிரை, A18 சிப், 48MP கேமரா, மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இதன் வடிவமைப்பு ஐபோன் 14 மாதிரியே காணப்பட்டாலும், 0.1 மி.மீ. மெல்லியதாகவும், 0.7 மி.மீ. குறைவான உயரத்துடனும் உள்ளது. USB-C சார்ஜிங் கொண்டுள்ள இது 7.5W வயர்லெஸ் […]
இந்திய கடல்வழி பாதுகாப்பை உறுதி படுத்தும் சோதனை வெற்றி பெற்றது. இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) வெற்றிகரமாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த சோதனை சந்திபூரில் நடைபெற்றது, இதில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சோதனையில், ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சம் மற்றும் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை, ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்களை […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.