நம்மவர் படிப்பகங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த உள்ளது. மக்கள் நீதி மய்யம், கோடை விடுமுறையை முன்னிட்டு நம்மவர் படிப்பகங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் இயங்கும் இந்த படிப்பகங்கள், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன. அமெரிக்காவின் லீப் (LEAP) அமைப்புடன் இணைந்து, ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆறு வாரங்களுக்கு […]
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. துணை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அவையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார், எஸ்.பி. வேலுமணி வழிமொழிந்தார். முதலில் குரல் வாக்கெடுப்பு நடந்தது, அதில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 63 பேர் ஆதரவாக, 154 பேர் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து சபாநாயகர் அப்பாவு மீண்டும் […]
ஆட்டோ கட்டண முறைகேட்டுக்கு அரசின் நடவடிக்கை வேண்டும் என யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம். ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ஓலா, ஊபர் செயலிகள் சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று குற்றம்சாட்டினார். அதன்படி, 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கேற்ப 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50, அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஓலா, ஊபர் ஆட்டோக்கள் 1.8 கிமீக்கு ரூ.76 வசூலிக்கின்றன என்று […]
சட்டசபைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூட உள்ளது. தமிழக பட்ஜெட் கடந்த 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் 15 ஆம் தேதி முன்வைக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் 17 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசினர். சட்டசபைக்கு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை […]
யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிக்க யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக் குழு) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இருப்பினும், யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. யு.ஜி.சி.யின் அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்படும் எந்த உயர்கல்வியும் சட்டபூர்வமாக செல்லாது என்பதோடு, அந்த படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கும் […]
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் இந்த பட்ஜெட்டை வழங்கினார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில், மாநகராட்சி பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பறைகளில் பாடங்கள், கதைகளை மின்னணு பலகை மூலம் காண்பிக்க ஒவ்வொரு வகுப்புக்கு ரூ.40,000 வழங்கப்படும். மேலும், தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு சுய வேலை […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.