செய்திகள் -

இந்தியாவில் டெஸ்லா ஆலை - அமெரிக்காவுக்கு அநீதி என்று கூறும் டிரம்ப்

May 17, 2025
அமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தயக்கம் காட்டி வந்த டெஸ்லா, 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட சொகுசு கார்களுக்கு இந்திய அரசு இறக்குமதி வரியை 110%-ல் இருந்து 70%-ஆக குறைத்த நிலையில், விரைவில் இந்திய சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்த எலான் மஸ்க், இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான அறிவிப்பை […]

வரி ஏய்ப்பு - 2900 கோடி கொடுக்கும் கூகுள்

May 17, 2025
கூகுள், இத்தாலியில் வரி ஏய்ப்பு புகாரை தீர்ப்பதற்காக 326 மில்லியன் யூரோ (340 மில்லியன் டாலர்கள்) செலுத்த ஒப்புக்கொண்டது. 2015 முதல் 2019 வரையிலான காலத்தில் முறையாக வரி செலுத்தாததாக மிலன் நகர நீதிமன்றம் வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் கூகுளின் விளம்பர வருவாயும் முக்கிய காரணமாக காணப்பட்டது. கூகுள் இந்த வழக்கை முடிக்க வரி தணிக்கையாளர்களுடன் உடன்படிக்கை செய்து, அனைத்து சட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதற்கு முன்பு, பிரான்ஸில் கூகுள் 1 பில்லியன் […]

பில் கட்டண சேவைகளில் வசதிக் கட்டணம் அறிமுகம் - கூகுள் பே அறிவிப்பு

May 16, 2025
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே (Google Pay) தனது பில் கட்டண சேவைகளில் வசதிக் கட்டணத்தை (Convenience fee) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மின்சாரம், எரிவாயு, நீர் போன்ற பயன்பாட்டு கட்டணங்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக செலுத்தும் போது 0.5% முதல் 1% வரையிலான கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக, பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியும் (GST) சேர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் இதுவரை இலவசமாக பணம் பரிமாற்றம் செய்த நிலையில், இந்த புதிய […]

இந்தியாவில் கத்தார் முதலீட்டு ஆணையத்தின் அலுவலகம் அமைப்பு

May 16, 2025
கத்தார் முதலீட்டு ஆணையம் இந்தியாவில் அலுவலகத்தை அமைத்து, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கத்தார் நாட்டு தலைவர் ஷேக் தமீம் பின் அமத் அல் தானி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். இது அவருடைய இரண்டாவது இந்திய பயணமாகும். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரடியாக வரவேற்றார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர […]

டெஸ்லா உடன் கூட்டணி - டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

May 16, 2025
டாடா மோட்டார்ஸ், அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் டெஸ்லாவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, மகாராஷ்டிராவை தேர்வு செய்துள்ளது. இந்திய EV சந்தை வளர்ச்சி மற்றும் உள்ளூர் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, டெஸ்லா ஒரு கூட்டணியை தேடுவதாக கூறப்படுகிறது. இதனால், டாடா மோட்டார்ஸ் பங்கு 1.3% உயர்ந்து ரூ.690.95 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச தரகு நிறுவனம் CLSA, அதன் பங்கு மதிப்பீட்டை மேம்படுத்தி, குறிக்கோள் விலையை ரூ.930 […]

பொதுத்துறை வங்கிகளின் 20% பங்குகள் விற்பனை: மத்திய அரசு முடிவு

May 15, 2025
செபி விதிமுறைகளை பின்பற்றி பங்கு விற்பனை திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு 5 பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொன்றிலும் 20 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. செபியின் விதிமுறையின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் புரோமோட்டர்களிடம் 75 சதவிகித பங்குகள் இருக்க வேண்டும், மீதமுள்ள பங்குகள் பொதுவாக விற்கப்பட வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிகமான பங்குகளை தன்வசமாக வைத்துள்ளது. […]
1 2 3 4

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu