செப்-1 முதல் 2023-24 வருடத்திற்கான நெல் கொள்முதல் தொடக்கம்

August 5, 2023

2023- 2024 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் குறுவை, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 2022-23 ஆம் வருடத்திற்கான கொள்முதல் 3497 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் மத்திய அரசின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டது. இது வழக்கமாக அக்டோபர் மாதம் […]

2023- 2024 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் குறுவை, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 2022-23 ஆம் வருடத்திற்கான கொள்முதல் 3497 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் மத்திய அரசின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டது. இது வழக்கமாக அக்டோபர் மாதம் நடைபெறும்.

இதே போல் இந்த ஆண்டு நெல் கொள்முதலையும் முன்கூட்டியே செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்குமாறு மு.க. ஸ்டாலின் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு கடிதம் மற்றும் நேரில் சென்று வலியுறுத்தினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1ஆம் தேதி நெல் கொள்முதல் தொடங்க தற்போது மத்திய அனுமதி அளித்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu