பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக டென்னிஸ் வுட்சைட் பொறுப்பேற்க உள்ளார். பிரெஷ் வொர்க்ஸ் நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கிரிஷ் மாத்ருபூதம் இனிமேல் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் சேர்மன் எனப்படும் நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.
கடந்த 2010ம் ஆண்டு, சென்னையை தலைமையகமாக கொண்டு பிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம் தோன்றியது. தொடர்ச்சியாக நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்து வந்த நிறுவனம், கடந்த 2021 முதல் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. கடந்த 2022 ம் ஆண்டு, பிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் டென்னிஸ் வெப்சைட் இணைந்தார். தற்போது முழுமையாக தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.