தமிழகத்தில் வெப்ப அலைகளின் காரணமாக தொடர்ந்து மின் தேவை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. மேலும் ஏப்ரல் மாதம் முழுவதும் வெயில் உக்கிரமாக இருந்து வந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். அதில் பல உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் கடந்த 30ஆம் தேதி அதிகபட்ச மின் தேவை 20701 மெகாவாட் என இருந்த நிலையில் தற்போது 20830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.














