ஆந்திர பிரதேசத்தில் 130 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

நாடு தழுவிய முறையில், இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள 130 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஜயநகரம் மற்றும் நந்தியாலா மாவட்டங்களில் தலா 19 மண்டலங்கள், என்டிஆர் மாவட்டத்தில் 14 மண்டலங்கள், அனகாபள்ளி மாவட்டத்தில் 13 மண்டலங்கள், […]

நாடு தழுவிய முறையில், இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள 130 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஜயநகரம் மற்றும் நந்தியாலா மாவட்டங்களில் தலா 19 மண்டலங்கள், என்டிஆர் மாவட்டத்தில் 14 மண்டலங்கள், அனகாபள்ளி மாவட்டத்தில் 13 மண்டலங்கள், பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தில் 12 மண்டலங்கள் ஆகியவற்றில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இயன்ற வரையில் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu