இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி - 5 ஆண்டுகளில் 22.6% வளர்ச்சி

கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 23% உயர்வை பதிவு செய்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஆம் நிதியாண்டில், 893.08 மில்லியன் டன் அளவில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2019 ஆம் நிதியாண்டில், 728.72 மில்லியன் டன் அளவில் பதிவாகி இருந்தது. எனவே, 5 ஆண்டுகளில் 22.6% உயர்வு பதிவாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய நிலக்கரி உற்பத்தியாளரான கோல் இந்தியா லிமிடெட், 2019 ஆம் நிதியாண்டில் 606.89 மில்லியன் டன் […]

கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 23% உயர்வை பதிவு செய்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஆம் நிதியாண்டில், 893.08 மில்லியன் டன் அளவில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2019 ஆம் நிதியாண்டில், 728.72 மில்லியன் டன் அளவில் பதிவாகி இருந்தது. எனவே, 5 ஆண்டுகளில் 22.6% உயர்வு பதிவாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நிலக்கரி உற்பத்தியாளரான கோல் இந்தியா லிமிடெட், 2019 ஆம் நிதியாண்டில் 606.89 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்திருந்தது. இதுவே, 2023 ஆம் நிதியாண்டில் 15.9% உயர்ந்து, 703.21 மில்லியன் டன் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே, இந்தியாவின் பிற நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களும் உயர்வை பதிவு செய்துள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய சுரங்கங்களில் இருந்து கிடைக்கப்பெறும் நிலக்கரியின் அளவு, 2023 ஆம் நிதியாண்டில், 122.72 மில்லியன் டன் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2019 ஆம் நிதியாண்டில், 57.43 மில்லியன் டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, 113.7% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu