ஈரான்-ஐ.என்.ஏ. அணுசக்தி ஒத்துழைப்பு நிறுத்தம் – புதிய பதற்ற சூழ்நிலை!

July 2, 2025

அணுசக்தி திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வரும் ஈரான், சர்வதேச அணுசக்தி அமைப்புடன் இருந்த ஒத்துழைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது மேற்கு நாடுகளிடையே புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரான், யூரேனியம் செறிவூட்டும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இதனையடுத்து, இஸ்ரேல் தனது நாட்டிற்கு ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்து, தாக்குதலை மேற்கொண்டது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக குண்டுவீச்சு நடத்தியது. 12 நாட்களுக்குப் பிறகு போர் நிறைவடைந்தாலும், […]

அணுசக்தி திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வரும் ஈரான், சர்வதேச அணுசக்தி அமைப்புடன் இருந்த ஒத்துழைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது மேற்கு நாடுகளிடையே புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஈரான், யூரேனியம் செறிவூட்டும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இதனையடுத்து, இஸ்ரேல் தனது நாட்டிற்கு ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்து, தாக்குதலை மேற்கொண்டது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக குண்டுவீச்சு நடத்தியது. 12 நாட்களுக்குப் பிறகு போர் நிறைவடைந்தாலும், ஈரான் தனது அணு திட்டங்களை மீண்டும் சீரமைத்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பை நிறுத்தும் உத்தரவை அதிபர் மசூத் பெசஸ்கியன் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால் சர்வதேச அளவில் ஈரானுக்கு எதிரான அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் கிளம்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu