இஸ்ரேல்–ஹமாஸ் போர்: 60 நாள் நிறுத்தத்திற்கு ஒப்புதல் – டிரம்ப் தகவல்!

July 2, 2025

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காசா போர் இரண்டாவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், அமெரிக்காவின் தலையீட்டில் 60 நாள் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளது. அமெரிக்கா சமாதான முயற்சிகளை தீவிரப்படுத்தி வந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். "எனது பிரதிநிதிகள் காசா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் அடிப்படையில், 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது," […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காசா போர் இரண்டாவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், அமெரிக்காவின் தலையீட்டில் 60 நாள் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளது.

அமெரிக்கா சமாதான முயற்சிகளை தீவிரப்படுத்தி வந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். "எனது பிரதிநிதிகள் காசா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் அடிப்படையில், 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது," என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இறுதி முன்மொழிவை கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் வழங்க உள்ளன என்றும், ஹமாஸ் அமைப்பும் சமாதானத்திற்கு ஒத்துழைக்குமென நம்பிக்கை தெரிவித்தார். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அதற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தற்காலிகமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu