ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

October 29, 2022

புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் சேர்த்து லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியதாவது, இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அனைவரும் கடினமாக உழைத்து வ௫கின்றனர். இ௫ப்பினும் இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இந்தியா இன்னும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. முயற்சிகள் […]

புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் சேர்த்து லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியதாவது, இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அனைவரும் கடினமாக உழைத்து வ௫கின்றனர். இ௫ப்பினும் இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இந்தியா இன்னும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. முயற்சிகள் பலனளிக்க வேண்டுமானால் கடவுளின் ஆசியும் தேவை. அதாவது சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசிர்வாதம் ஆகியவற்றின் மூலமே நாடு முன்னேற்றம் அடையும்.

எனவே, இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தையும் மறுபுறம் லட்சுமி, விநாயகரின் படங்களையும் சேர்க்க வேண்டும். ஏற்கனவே தனது கோரிக்கையாக இதனை பிரதமரிடம் கேட்ட நிலையில் தற்போது 130 கோடி மக்களும் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, இந்த கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்தி௫ந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu