அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி இருவர் பலி

May 17, 2025

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள மரானா விமான நிலையத்தில் இன்று காலை 8.28 மணியளவில் புறப்பட்ட செஸ்னா 172எஸ் மற்றும் லன்கெய்ர் 360 எம்.கே. 2 என்ற இரண்டு ஒற்றை என்ஜின் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்களில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் விமான விபத்துகள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி 29-ந்தேதி வாணிக ஜெட் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் […]

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள மரானா விமான நிலையத்தில் இன்று காலை 8.28 மணியளவில் புறப்பட்ட செஸ்னா 172எஸ் மற்றும் லன்கெய்ர் 360 எம்.கே. 2 என்ற இரண்டு ஒற்றை என்ஜின் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்களில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் விமான விபத்துகள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி 29-ந்தேதி வாணிக ஜெட் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதி 67 பேர் பலியாகினர். ஜனவரி 31-ந்தேதி பிலடெல்பியாவில் ஒரு சரக்கு விமானம் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி முதல் வாரத்தில் அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 10 பேர் பலியாகினர். இந்த சூழலில், அரிசோனாவில் நடந்த இவ்விபத்து அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் கவலை உருவாக்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu