தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் இருப்பதை பெருமையாக கருதுகின்றேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண். தமிழ்நாடு விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி உலகத்திற்கே முக்கியமான நாள். உலகத்தையே தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் வியக்க வைத்துள்ளனர். விண்வெளி திட்டத்தில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.














