இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு அமைப்பு

December 28, 2023

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்காக 3 பேர் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இதனை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியது. இந்த மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்திர சிங் பஜ்வா, […]

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்காக 3 பேர் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இதனை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியது. இந்த மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்திர சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம் சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளில் மேற்பார்வை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu