மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் இரண்டு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 68% அளவுக்கு வாக்குகள் பதிவானது. இந்நிலையில் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள சில வாக்குச்சாவடி அருகே திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து 47 தொகுதிகளுக்கு மறு வாக்கு பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கி சூடு எதிரொலியாக மணிப்பூரில் உள்ள 11 வாக்கு சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.














