மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. இதில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் பாமக மாநில கட்சி என்று அந்தஸ்தை இழந்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் இக்கட்சி மாநில கட்சி […]

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. இதில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் பாமக மாநில கட்சி என்று அந்தஸ்தை இழந்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் இக்கட்சி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்நிலையில் பாமக கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu