ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 90% இந்தியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன. இங்கு, சுமார் 200 இந்தியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 12 இந்தியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு பணியாற்றி வந்தவர்களில், பெரும்பாலானோர், ப்ராடக்ட் மட்டும் இன்ஜினியரிங் குழுக்களில் இடம்பெற்றிருந்தனர். அவர்களே முக்கியமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், கார்ப்பரேட் கம்யூனிகேஷன், பப்ளிக் பாலிசி துறைகளில் பணியாற்றி வந்த இந்தியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ட்விட்டர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.