செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30000 குழந்தைகள் பெறலாம் - பெர்லின் நிறுவனம் அறிவிப்பு

December 16, 2022

பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எக்டோ லைஃப் என்ற தனியார் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண்களின் கர்ப்பப்பை போன்று வடிவமைக்கப்பட்ட செயற்கை கருப்பை பெட்டிகள் மூலம், ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. வாடகை தாய் முறை மற்றும் செயற்கை கருவூட்டல் முறை ஆகியவை வியாபாரம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், இந்த அறிக்கை சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது. எக்டோ லைஃப் நிறுவனம், உலகில் முதல்முறையாக, செயற்கை […]

பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எக்டோ லைஃப் என்ற தனியார் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண்களின் கர்ப்பப்பை போன்று வடிவமைக்கப்பட்ட செயற்கை கருப்பை பெட்டிகள் மூலம், ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. வாடகை தாய் முறை மற்றும் செயற்கை கருவூட்டல் முறை ஆகியவை வியாபாரம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், இந்த அறிக்கை சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.

எக்டோ லைஃப் நிறுவனம், உலகில் முதல்முறையாக, செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் செயற்கை கருப்பை பெட்டிகளில் உள்ள சென்சார்கள் மூலம், குழந்தைகளின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் போன்ற உயிர்காக்கும் அம்சங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இது தொடர்பான காணொளியை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் மூலம், கர்ப்பப்பை பாதிப்பு உள்ள பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும், குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu