அசாமில் ரூ. 5,500 கோடியில் மின் திட்டம்

August 11, 2022

அசாமில் 5,500 கோடி மதிப்பில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடலுார் மாவட்டம், நெய்வேலியில் தொடங்கப்பட்ட இந்திய நிறுவனம் என்.எல்.சி., ஆகும். . இந்நிறுவனம் ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளிலும் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் நிறுவனம், தனது துணை நிறுவனமான என்.எல்.சி., தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மின் நிலையத்தையும் சேர்த்து, மணிக்கு மொத்தம் 60 […]

அசாமில் 5,500 கோடி மதிப்பில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம், நெய்வேலியில் தொடங்கப்பட்ட இந்திய நிறுவனம் என்.எல்.சி., ஆகும். . இந்நிறுவனம் ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளிலும் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் நிறுவனம், தனது துணை நிறுவனமான என்.எல்.சி., தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மின் நிலையத்தையும் சேர்த்து, மணிக்கு மொத்தம் 60 லட்சத்து 61 ஆயிரம் யூனிட் (6061 மெகாவாட்) உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்கி வருகிறது.

தற்போது, வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ. 5,500 கோடி செலவில், ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் திட்டங்களை அமைக்க ஒரு கூட்டு நிறுவனத்தை என்.எல்.சி., இந்தியா நிறுவனம், அசாம் மாநில மின் விநியோக நிறுவனத்துடன் இணைந்து தொடங்க உள்ளது.இந்நிறுவனத்திற்கான மூலதனத்தில் 51 சதவீதத்தை என்.எல்.சி., இந்தியா நிறுவனமும், எஞ்சிய 49 சதவீதத்தை, அசாம் மாநில மின் விநியோக நிறுவனமும் வழங்க உள்ளன.

இதற்கான ஒப்பந்தம், அசாம் மாநில தலைமைச் செயலகமான ஜனதா பவனில் நேற்று கையெழுத்தானது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைகளுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், என்.எல்.சி., இந்தியா நிறுவன திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன் ரெட்டி மற்றும் அசாம் மின் விநியோக நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஆரிப்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் அசாம் மாநில சுரங்கம் மற்றும் மின்துறை அமைச்சர் நந்திதா காரிலோசா, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார், சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திரா சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu