இந்திய ராணுவம் 2026ஆம் ஆண்டில் ஜிசாட்-7பி என்ற புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி பணிகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது, அவை வானிலை, பேரிடர் தகவல்கள், பூமி கண்காணிப்பு, மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற உதவிகளை செய்கின்றன. 2013ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக ஜிசாட்-7 மற்றும் 2018ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கான மேம்பட்ட ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ விண்ணில் ஏவப்பட்டன. இதன்படி, […]
அங்கீகாரம் இல்லாத செயலிகள் மற்றும் இணையதளங்களை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘ஜிப்லி’ வகை செயற்கை நுண்ணறிவு அனிமேஷன் புகைப்படங்களை உருவாக்கும் செயலிகள் அண்மையில் பெரும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த செயலிகளில் அங்கீகாரம் இல்லாதவை பல உள்ளன என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. பொதுமக்கள், தெரிந்தோ தெரியாமலோ தங்களது பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் புகைப்படங்களை இந்த செயலிகளில் அளிக்கின்றனர். இதன் மூலம், அவர்களது தனிப்பட்ட தகவல்கள் மூன்றாவது நபர்களிடம் பகிரப்பட்டு, விளம்பர நிறுவனங்கள் மற்றும் வணிக […]
ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஏவியது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பல போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. இந்தப் போட்டியில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனி நாட்டின் இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கியமாக பங்கு பெற்று வருகிறது. இந்நிலையில் நார்வேயிலிருந்து ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஏவியது. இது ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் என கருதப்படுகிறது. திட்டமிட்டபடி ராக்கெட் […]
இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் பின்னர், குருகிராமில் உள்ள எஸ்.எஸ்.இன்னோவேஷன் நிறுவன தலைவர் டாக்டர் சுதிர்ஸ்ரீவஸ்தவா தலைமையில், ரோபோடிக் கமிட்டி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.