குஜராத் அணியுடன் விளையாடிய கொல்கத்தா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு 199 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரஹானே தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடாமல் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் […]
தெலுங்கானா மாநிலத்தில் கடும் வெப்பத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடும் வெப்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்மல் மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசித்த சங்கர் (48) மற்றும் ராஜூ (42) ஆகியோர் வீட்டிற்கு திரும்பியபோது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இருவரும் பலியாகினர். கரீம் நகர் மாவட்டத்தில் நெல்லு உலர்த்திய ஜல்லம்மா (59), அடிலாபாத் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்த சவான் கேசவ் (60), மஹபூபாபாத் மாவட்டத்தில் நெல் விற்பனைக்கு சென்ற பிரேமலதா (60) […]
இன்று மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் விவாத குழு தொடங்கியது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தும் நோக்கில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் பாராளுமன்ற கூட்டு குழு (ஜேபிசி) அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பதவிக்காலம் 2025 […]
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளதுடன், தமிழக அரசு இன்று, நாளை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக […]
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், இந்திய அணி தோல்வி அடைந்தது. சீனாவின் நிங்போ நகரில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிரஸ்டோ ஜோடி, காங்காங் ஜோடியுடன் மோதியது. இந்தப் போட்டியில், முதல் செட்டில் 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. பின்னர், 2வது செட்டையும் 21-13 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. இதனால், 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வெற்றி […]
பீகாரில் இடி, மின்னல் தாக்கி மற்றும் ஆலங்கட்டி மழையினால் 25 பேர் உயிரிழந்தனர். பீகாரின் பல மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை (நேற்று) அடிக்கப்பட்ட இடி, மின்னல் தாக்கி மற்றும் ஆலங்கட்டி மழையினால் 25 பேர் உயிரிழந்தனர். முதலமைச்சர் அலுவலகம் (CMO) வெளியிட்ட அறிக்கையில், நாளந்தா மாவட்டத்தில் 18 பேர், சிவானில் 2 பேர், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்கான இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் நிதீஷ் குமார், […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.