செய்திகள் -

சிறார்களுக்கான வைப்பு கணக்குகள்- ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவுகள்

Apr 22, 2025
சிறார்களுக்கான வைப்பு கணக்குகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சிறார்களுக்கு சுருக்கமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் தற்போது சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளை தங்களுக்கு நேரடியாக திறந்து நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்பிஐ சுற்றறிக்கையின் படி, வங்கிகள் சிறார்களுக்கு நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம், டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளை வழங்க முடியும். இருப்பினும், சிறார்களின் கணக்குகளில் அதிகமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இதனை […]

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.2680 உயர்வு

Apr 10, 2025
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,680 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில வாரங்களில் தொடர் உயர்வை சந்தித்து வந்தது. கடந்த 3ம் தேதி ஒரு சவரன் ரூ.68,480 என்ற உச்ச விலையை தொட்டது. அதன்பின் சில நாட்களுக்கு விலை குறைந்து மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஆனால் நேற்று தங்கம் விலை ஒரே நாளில் இரு முறைகள் உயர்ந்து, கிராமுக்கு ரூ.185, சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்தது. அதன்படி ஒரு சவரன் ரூ.67,280-க்கு விற்பனை […]

5 நாட்களுக்கு பின் மீண்டும் தங்க விலை உயர்வு

Apr 09, 2025
ஆபரணதங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி, தங்க விலை ரூ.68,000 என்ற உச்சத்தை தொட்டது. ஏப்ரல் 3-ஆம் தேதி இது மேலும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560, சவரன் ரூ.68,400 ஆக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நாட்களில் விலை வீழ்ச்சி கண்டது. ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.8,400-க்கும், சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையடைந்தது. நேற்று அது மேலும் குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225, சவரன் ரூ.65,800 என […]

ரெப்போ விகிதம் குறைப்பு: வீடு வாகனக் கடனாளிகளுக்கு நிவாரணம்

Apr 09, 2025
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளது. இது வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு EMI குறைவாகும் வகையில் நிவாரணம் அளிக்கிறது. இதற்கு முன்பு பிப்ரவரியில், 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து விகிதம் 6.25% ஆக மாற்றப்பட்டிருந்தது. தற்போதைய புதிய விகிதக் குறைப்பால் […]

ஐபிஎல் 2025: ஜியோ சலுகை முடிந்து புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

Apr 01, 2025
நேற்றுடன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவச ஐபிஎல் பார்ப்பதற்கான சலுகை முடிவடைந்துள்ளது. ஐபிஎல் 19-வது சீசன் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவச ஐபிஎல் பார்ப்பதற்கான சலுகை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இச்சலுகை மார்ச் 31-ம் தேதி முடிய உள்ளது. இந்த சலுகை நீட்டிப்பது குறித்து ஜியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் பிறகு, ஜியோ பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை […]

நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

Apr 01, 2025
2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது. 2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் காணப்பட்டது. காலை 10.30 மணியளவில் நிப்டி 23,292.25 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 76,511.96 புள்ளிகளுக்கும் சரிவை கண்டது. மதியம் 12.15 மணிக்கு நிப்டி 23,240 புள்ளியாகவும், சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை சந்தித்தது.
1 2 3

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu