இந்தியா சீனா ராணுவ தளபதிகள் உடைய 19 வது சுற்று பேச்சு வார்த்தை வருகின்ற 14 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளின் படைகளை அங்கு குவித்ததால் போர்ப்பதட்டம் ஏற்பட்டது. இருநாட்டு ராணுவ தரப்பிலும், தூதரக ரீதியாகவும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக 18வது சுற்று பேச்சு வார்த்தை ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் வருகின்ற 14-ஆம் தேதி 19-வது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய குழுவிற்கு கமாண்டார் லெப்டினன் ஜெனரல் பாலி தலைமை தாங்குகிறார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும், சீனா தரப்பில் தெற்கு சின்ஜியங் ராணுவ அதிகாரிகள் தலைமையிலான குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.
இதில் கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகளை குறைப்பதற்கும், டெப்சொங் சமவெளி, டென்சோக் பகுதிகளில் இராணுவ வீரர்களை வெளியேற்றுவதற்கு இந்திய தரப்பில் அழுத்தம் கொடுக்க உள்ளனர்.