சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிவரும் ஒளியை படம் பிடித்தது நாசா

அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா சூரியனின் பக்கத்திலிருந்து சூரிய கொதிப்பு ஏற்படுவதை படம் பிடித்துள்ளது. நாசா தனது இணையதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவானது சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியால் படம்பிடிக்கப்பட்டது. மேலும் வெடித்த இடத்தில் இருந்து வெப்பமான துகள்கள் வெளியேறும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சூரிய கொதிப்பு என்பது சூரியனிடமிருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சின் வெடிப்புகள் ஆகும், . சமீபத்திய நாட்களில் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல கதிர்வீச்சு வெடிப்புகளை பதிவுசெய்து, பூமியில் அவற்றின் தாக்கம் […]

அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா சூரியனின் பக்கத்திலிருந்து சூரிய கொதிப்பு ஏற்படுவதை படம் பிடித்துள்ளது. நாசா தனது இணையதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவானது சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியால் படம்பிடிக்கப்பட்டது. மேலும் வெடித்த இடத்தில் இருந்து வெப்பமான துகள்கள் வெளியேறும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சூரிய கொதிப்பு என்பது சூரியனிடமிருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சின் வெடிப்புகள் ஆகும், . சமீபத்திய நாட்களில் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல கதிர்வீச்சு வெடிப்புகளை பதிவுசெய்து, பூமியில் அவற்றின் தாக்கம் பற்றி எச்சரித்து வ௫கின்றனர். சூரிய கதிர்வீச்சில் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் X-கதிர்கள் மிக தீவிரமானவை. அதாவது அவை பூமியின் வளிமண்டலத்தின் ஒரு பகுதியான, மின்துகள்கள் மற்றும் ரேடியோ அலைகள் கொண்ட அயனோஸ்பியரில் ஊடு௫வி ரேடியோ தகவல்தொடர்புகளை பாதிக்கக்௯டியவை.
இந்த சூரிய எரிப்பு B, C, M, and X எனவும் 1 முதல் 9 வரை துணைப்பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, எம்-கிளாஸ் மற்றும் அதற்கு மேல் இருக்கும் எரிப்புகள் பூமியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பூமியானது இந்த சூரிய கொதிப்பு நிகழும் நேர்கோட்டில் இல்லை. இ௫ப்பினும் இந்த வார பிற்பகுதியில் வடகிழக்கு பகுதிக்கு மேல் இந்த வெடிப்பு பூமியில் வெளிப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu