செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க மனு தாக்கல் செய்தார். ஆனால் இதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்பொழுதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை இன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை இவர் மீதான நீதிமன்ற காவல் 20 முறைக்கு மேலாக நீட்டிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.