ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதலாம் ஆண்டு நிறைவு - நட்சத்திர பிறப்பின் புகைப்படம் பகிர்ந்த நாசா

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் புகைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வகையில், தொலைநோக்கியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, நாசா புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளது. நட்சத்திர பிறப்பை குறிக்கும் இந்த ஆச்சரிய புகைப்படம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 390 ஒளி ஆண்டுகள் தொலைவில், Rho Ophiuchi விண்மீன் கூட்டம் அமைந்துள்ளது. இங்கு 50 இளம் நட்சத்திரங்கள் புதிதாக தோன்றுவது ஜேம்ஸ் வெப் […]

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் புகைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வகையில், தொலைநோக்கியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, நாசா புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளது. நட்சத்திர பிறப்பை குறிக்கும் இந்த ஆச்சரிய புகைப்படம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 390 ஒளி ஆண்டுகள் தொலைவில், Rho Ophiuchi விண்மீன் கூட்டம் அமைந்துள்ளது. இங்கு 50 இளம் நட்சத்திரங்கள் புதிதாக தோன்றுவது ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரங்கள் பெரும்பாலும் சூரியனை விட அளவில் சிறியதாக உள்ளன. நாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu