தமிழக அரசு சார்பில் ஆட்டோ முன்பதிவு செயலி வேண்டும் - ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

ஆட்டோ பயணத்தை முன்பதிவு செய்வதற்கான செயலியை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு, டீசல், பெட்ரோல்,சமையல் காஸ் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டது. இருந்தபோதிலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சலுகைகளோ, மானியமோ வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் ஆட்டோ முன்பதிவு செயலிகள் மூலம் தொழிலாளர்களை சுரண்டி […]

ஆட்டோ பயணத்தை முன்பதிவு செய்வதற்கான செயலியை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு, டீசல், பெட்ரோல்,சமையல் காஸ் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டது. இருந்தபோதிலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சலுகைகளோ, மானியமோ வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் ஆட்டோ முன்பதிவு செயலிகள் மூலம் தொழிலாளர்களை சுரண்டி பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. மீட்டர் கட்டணத்தை விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மாநிலஅரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்டோ ஊழியர்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
விலைவாசி, எரிபொருள் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை தானாகவே மாற்றிக் கொள்ளும் வகையில், சிறந்த தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடிய டிஜிட்டல் மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும். மீட்டர்கட்டணமாக ஒரு கி.மீ.க்கு ரூ.50, அடுத்து ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 என நிர்ணயிக்க வேண்டும்.

கேரள அரசைப்போல தமிழக அரசும் ஆட்டோ முன்பதிவு செயலியை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்களும் அந்த செயலியைப் பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu