தாய்வான் உடனான வர்த்தகத்தை நிறுத்திய சீனா

August 3, 2022

அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி, தாய்வானுக்கு வருகை தந்ததற்கு சீனா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது, தாய்வான் உடனான வர்த்தகத்தில் சில தடைகளை சீனா கொண்டுவந்துள்ளது. கராச்சியில் உள்ள சீனப் பிரதிநிதியான லி பிஜியன், சிட்ரஸ் பழங்கள், குறிப்பிட்ட சில மீன் வகைகள் போன்றவற்றை தாய்வானில் இருந்து இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த வருடம் முதலே, தாய்வானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்து வந்தது. கடந்த ஜூன் […]

அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி, தாய்வானுக்கு வருகை தந்ததற்கு சீனா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது, தாய்வான் உடனான வர்த்தகத்தில் சில தடைகளை சீனா கொண்டுவந்துள்ளது.
கராச்சியில் உள்ள சீனப் பிரதிநிதியான லி பிஜியன், சிட்ரஸ் பழங்கள், குறிப்பிட்ட சில மீன் வகைகள் போன்றவற்றை தாய்வானில் இருந்து இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த வருடம் முதலே, தாய்வானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்து வந்தது. கடந்த ஜூன் மாதத்தில் தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீனில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பின்னர், பாதுகாப்பு கருதி தைவான் மீன்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டது. இந்நிலையில், பெலோசியின் தைவான் வருகையால், மேலும் பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது வருகை, ஒரே சீனா என்ற கொள்கையையும், அமெரிக்கா சீனா இடையிலான மூன்று ஒப்பந்தங்களையும் மீறுவது போலாகும் என்று சீனா கருதுகிறது. மேலும், தாய்வான் பகுதியில் நிலவும் அமைதியை கேள்விக்குறி ஆக்கும் செயலாகவும் இதனை சீனா பார்க்கிறது. இது தொடர்பாக, பெலோசியின் விளக்கங்களை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், செவ்வாய்க்கிழமை முதல், தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேக்கரி உணவுகளுக்கு சீனா தடை விதித்தது. உணவுப் பொருட்களுக்கு சீனா தடை விதித்ததை தாய்வானின் வேளாண் அமைப்பு உறுதி செய்துள்ளது. குறிப்பாக தேயிலை, உலர் பழங்கள், தேன், கொக்கோ, காய்கறிகள், மீன்கள் வகைகள் போன்றவற்றுக்கு சீனா தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தாய்வான் வேளாண் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், மொத்தம் உள்ள 107 பதிவு செய்யப்பட்ட உணவு நிறுவனங்களில், 35 நிறுவனங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த தடையினால் தாய்வானைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu