நெல்லை, தென்காசியில் மழை : பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 9 அடி உயர்வு

August 5, 2022

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில்9 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 17 அடியும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பாபநாச த்தில் 15 மி.மீ மழையும், சேர்வலாறில் - 6 மி.மீ, மணிமுத்தாறில்- 7.26 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 4 மி.மீ, சேரன்மகாதேவியில் 4.4 மி.மீ, களக்காட்டில் 1.2 மி.மீ, பாளையங்கோட்டையில் 4 மி.மீ, […]

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில்9 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 17 அடியும் உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், பாபநாச த்தில் 15 மி.மீ மழையும், சேர்வலாறில் - 6 மி.மீ, மணிமுத்தாறில்- 7.26 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 4 மி.மீ, சேரன்மகாதேவியில் 4.4 மி.மீ, களக்காட்டில் 1.2 மி.மீ, பாளையங்கோட்டையில் 4 மி.மீ, திருநெல்வேலியில் 4.6 மி.மீ, கடனாவில்18 மி.மீ, ராமநதியில் 6 மி.மீ, கருப்பாநதியில் 12 மி.மீ, குண்டாறில் 62 மி.மீ, அடவிநயினாறில் 31 மி.மீ, ஆய்க்குடியில் 2 மி.மீ, செங்கோட்டையில் 7 மி.மீ, தென்காசியில் 4 மி.மீ, சிவகிரியில் 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது..
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 75.30 அடியாக இருந்த நிலையில் நேற்று காலையில் 9 அடி உயர்ந்து 84 அடியாக இருந்தது. அணைக்கு 7,733 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 17 அடிஉயர்ந்து 117.78 அடியாக இருந்தது. தென்காசி மாவட்டத்தில் 85 அடிஉச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 74 அடியாக இருந்தது. 132 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 103 அடியாக இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று 4-வது நாளாக சுற்றுலாபயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலுள்ள தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu