மியாமி ஓபன் டென்னிஸில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, செக் நாட்டின் ஆடம் பாவ்லாசெக் மற்றும் பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியுடன் மோதியது. இதில், யூகி பாம்ப்ரி மற்றும் நுனோ போர்ஜஸ் ஜோடி 7-6 (7-4), 6-2 என வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.