ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் NATO வில் இணைப்பு - அமெரிக்கா ஒப்புதல்

August 10, 2022

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை NATO கூட்டமைப்பில் இணைப்பதற்கான ஒப்புதல் பத்திரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பொழுது, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் NATO கூட்டமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. அதனை ஏற்ற NATO அமைப்பு, இரு நாடுகளையும் உறுப்பினர்களாகச் சேர்க்க முறையான வரவேற்பு வழங்கியது. இதையடுத்து, NATO கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள், இதற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. அந்த வரிசையில், 30 நாடுகள் […]

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை NATO கூட்டமைப்பில் இணைப்பதற்கான ஒப்புதல் பத்திரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பொழுது, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் NATO கூட்டமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. அதனை ஏற்ற NATO அமைப்பு, இரு நாடுகளையும் உறுப்பினர்களாகச் சேர்க்க முறையான வரவேற்பு வழங்கியது. இதையடுத்து, NATO கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள், இதற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. அந்த வரிசையில், 30 நாடுகள் கொண்ட NATO அமைப்பில், 23 வது நாடாக அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதத்தில், பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு ஆதரவாக அமெரிக்க செனட் வாக்கெடுப்பு முடிவு வெளியானது. தற்போது அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் ஆதரவும் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அதிபர் ஜோ பைடன், சில மாதங்களுக்கு முன்னர், பின்லாந்து அதிபர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, அவர்களுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என்று தான் உறுதி அளித்ததாகக் கூறினார். ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்து இடுவதற்கு முன்னர் அவர், ஸ்வீடன் பிரதமர் மேக்டலினா அண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்ட்டோ மற்றும் ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் அண் லின்டே ஆகியோர் இந்த கையெழுத்திடும் நிகழ்வில் உடன் இருந்தனர். NATO கூட்டமைப்பின் 32 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் முடிவில், NATO அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்ட்பெர்க், NATO கூட்டமைப்பு மேலும் வலுவடைந்து உள்ளதாகத் தெரிவித்தார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu