அதானி குழுமத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆசியாவின் முதன்மை பணக்காரர் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள அதானி, நாடு முழுவதும் துறைமுக தொழிலை விரிவுபடுத்தி வருகிறார். மேலும் பல்வேறு புதிய துறைகளிலும் முதலீடுகளை அதிகரித்து வருகிறார். இந்நிலையில், அதானி குழுமம் பெரும்பாலான புதிய முதலீடுகளை கடன் பெற்றே செய்து வருவதாகவும், இதனால் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் கிரெடிட் சைட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
புதிய முதலீடுகளால் அதானி குழுமத்தின் பண புழக்கம் கடுமையாக சரிந்துள்ளது. சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அதானி குழுமத்தின் கடன் சுமை பெருகி உள்ளது. இருந்தாலும், வங்கிகளுடனான நெருக்கமான பிணைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உடனான நட்புறவு போன்ற காரணங்களால் அதானி குழுமம் பாதுகாப்பான சூழலில் தான் உள்ளது என்றும் கிரெடிட் சைட்ஸ் தெரிவித்துள்ளது.