அர்மேனியா அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே போர் காரணமாக 13.000க்கும் மேற்பட்டோர் அகதிகளானர்.
தெற்கு காகசஸ் மலைப்பகுதி அருகில் உள்ள நக்கோர்னோ காராபக் பகுதியை உரிமை கொண்டாடி அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வசித்து வந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்களிள் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியில் இருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்துள்ளனர்.
கடந்த வாரம் இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதால் இந்த மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அர்மேனியாவிற்குள் நுழைந்துள்ளார்கள். இதற்கிடையே அப்பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் அர்மேனியர்களை அஜர்பைஜான் நாட்டு பிரதிகளாக மாற்றப் போவதாக அந்த நாடு தெரிவித்திருந்தது. அனால் தற்போது அகதிகளாக வந்திருப்பவர்களுக்கு உதவிகளை செய்து தர அர்மேனியா ஒப்பு கொண்டுள்ளது.