அளவு குறைவாக 'ஆவின்' பால் பாக்கெட்

August 1, 2022

ஆவின் நிறுவனம் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவை மூன்று தரங்களாக பிரிக்கப்படுகிறது. அவை ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. சென்னையில் நாள்தோறும், 13 லட்சம் லிட்டர் பால், மற்ற மாவட்டங்களில் 20 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சிய பாலில் வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட, 80 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. தேர்தலின் […]

ஆவின் நிறுவனம் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவை மூன்று தரங்களாக பிரிக்கப்படுகிறது. அவை ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன.
சென்னையில் நாள்தோறும், 13 லட்சம் லிட்டர் பால், மற்ற மாவட்டங்களில் 20 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சிய பாலில் வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட, 80 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆனால், இரு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகள் 430 கிராம் மட்டுமே இருந்தன. இதை கண்டறிந்த பால் முகவர் ஒருவர், ஆவின் அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை.

நாள்தோறும் விற்பனையாகும், 33 லட்சம் லிட்டர் பாலை கணக்கிடும் போது, பல லிட்டர் பால் நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. விலை குறைப்பால், ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிப்பதற்கு இந்த நுாதன செயலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி நுகர்வோர்களுக்கு சரியான அளவில், பால் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை, மாதவரம் பால் பண்ணையில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக, இந்த அளவு குறைவு ஏற்பட்டிருக்கலாம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu