இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி நாடு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. பல துறைகள் பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை 15 ஆம் தேதி வரை மக்கள் இலவசமாக பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சார துறை மந்திரி கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை, சுற்றுலா தலங்களை பார்வையாளர்கள் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம்.