ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம் அறிவிப்பு

ஆட்டோ கட்டண முறைகேட்டுக்கு அரசின் நடவடிக்கை வேண்டும் என யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம். ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ஓலா, ஊபர் செயலிகள் சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று குற்றம்சாட்டினார். அதன்படி, 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கேற்ப 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50, அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஓலா, ஊபர் ஆட்டோக்கள் 1.8 கிமீக்கு ரூ.76 வசூலிக்கின்றன என்று […]

ஆட்டோ கட்டண முறைகேட்டுக்கு அரசின் நடவடிக்கை வேண்டும் என யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம். ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ஓலா, ஊபர் செயலிகள் சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

அதன்படி, 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கேற்ப 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50, அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஓலா, ஊபர் ஆட்டோக்கள் 1.8 கிமீக்கு ரூ.76 வசூலிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். இதைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி ஆணையிடவும், மேலும் அரசு தானே தனியார் செயலிகளுக்குப் போட்டியாக ஒரு ஆட்டோ ஆப் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பகுதி மக்களும் அதனை ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu