டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆவின் டிலைட் பால் மாதாந்திர அட்டை மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்திவிட்டு டிலைட் எனும் ஊதா நிற பாக்கெட் விநியோகிக்க முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த போவதில்லை எனவும், ஊதா நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் மாதாந்திர அட்டை மூலம் ஆவின் ஊதா நிற பால்பாக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 500 மில்லி ₹21க்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு மாதாந்திர அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.