கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.81% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் பதிவாகும் உச்சபட்ச பணவீக்கம் ஆகும். எனினும், மத்திய ரிசர்வ் வங்கியின் 6% விளிம்புக்குள் பணவீக்கம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்த காரணத்தினாலேயே ஜூன் மாத பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து சரிவடைந்து வந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் மீண்டும் உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் அளித்துள்ள தகவலின் படி, மே மாத சில்லறை பணவீக்கம் 4.31% ஆகவும், 2022 ஜூன் மாத பணவீக்கம் 7% ஆகவும் உள்ளது. எனவே, வருடாந்திர அடிப்படையில் நல்ல முன்னேற்றம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.