இக்கியா நிறுவனம் (Ikea) ஆன்லைன் சேனலின் ஆதரவுடன் இந்தியாவில் பிரமாண்டமான சிறிய விற்பனை நகரத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.க்காக
ஸ்வீடிஷ் பர்னிச்சரின் சில்லறை விற்பனையாளரான இக்கியா ஆன்லைன் சேனலின் ஆதரவுடன் இந்தியாவில் பிரமாண்டமான அமைப்பில் சிறிய நகரத்தை அமைத்து அதில் விற்பனை நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இக்கியா ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரில் மூன்று பெரிய ஸ்டோர்களையும் விற்பனைக்காக அமைத்துள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் ரூ.10,500 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும் அதற்கான ஒப்புதலையும் 2013 ஆம் ஆண்டு அரசாங்கத்திடமி௫ந்து பெற்றுள்ளது. மேலும் 10 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பர்னிஷிங் மற்றும் ஹோம்-வேர் உள்கட்டமைப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ௯டுதலாக 15 கடைகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இது குறித்துக் IKEA India வின் CEO Susanne Pulverer கூறும்போது "தொற்றுநோயின் தாக்கம் காரணமாக மக்கள் இருக்கும் இடத்திலி௫ந்து வேண்டியதை பெறுவதற்காக மக்களுக்கு நெ௫க்கமாக இ௫க்க வேண்டும். ஆகவே நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்றார்.














